Homeசெய்திகள்சினிமாதமிழகத்தில் 'கேம் சேஞ்சர்' ரிலீஸ் பிரச்சனை.... முற்றுப்புள்ளி வைத்த சங்கர்!

தமிழகத்தில் ‘கேம் சேஞ்சர்’ ரிலீஸ் பிரச்சனை…. முற்றுப்புள்ளி வைத்த சங்கர்!

-

- Advertisement -

தமிழகத்தில் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் ரிலீஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் 'கேம் சேஞ்சர்' ரிலீஸ் பிரச்சனை.... முற்றுப்புள்ளி வைத்த சங்கர்!ராம் சரண் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கியிருக்கும் திரைப்படம் தான் கேம் சேஞ்சர். இந்த படம் வருகின்ற ஜனவரி 10ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்ற வருகின்றன. ஆனால் இதற்கு இடையில் இயக்குனர் சங்கருக்கும் – இந்தியன் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்திற்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டது. அதாவது இந்தியன் 2 படத்தின் தோல்வியினால் இந்தியன் 3 படத்திற்காக ஷங்கரின் சம்பளம் தொடர்பாக லைக்கா நிறுவனத்திற்கும் ஷங்கருக்கும் இடையில் பிரச்சனை ஓடிக்கொண்டிருந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் கேம் சேஞ்சர் படத்தை வெளியிட ரெட் கார்டு போட லைக்கா நிறுவனம் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்திருந்ததாக சொல்லப்படுகிறது. எனவே தமிழகத்தில் கேம் சேஞ்சர் படம் ரிலீஸ் ஆகுமா? என்ற சந்தேகம் இருந்தது. தமிழகத்தில் 'கேம் சேஞ்சர்' ரிலீஸ் பிரச்சனை.... முற்றுப்புள்ளி வைத்த சங்கர்!ஆனால் தற்போது இந்தியன் 3 படத்திற்கான தன்னுடைய சம்பளத்தை சங்கர் குறைப்பதற்கு ஓகே சொல்லிவிட்டார் எனவும் இந்த பிரச்சனையில் சுமூகமான தீர்வு எட்டப்பட்டுள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையினால் கேம் சேஞ்சர் திரைப்படம் தமிழகத்தில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இப்படத்தை ராக்போர்ட் நிறுவனம் வெளியிட இருக்கிறது. அதற்கான டிக்கெட் முன் பதிவு பணிகளும் இதர பணிகளும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

MUST READ