Homeசெய்திகள்சினிமாகேம் சேஞ்சர் படத்தை இன்னும் சிறப்பாக பண்ணியிருக்க வேண்டும்.... இயக்குனர் சங்கர்!

கேம் சேஞ்சர் படத்தை இன்னும் சிறப்பாக பண்ணியிருக்க வேண்டும்…. இயக்குனர் சங்கர்!

-

- Advertisement -

இயக்குனர் சங்கர் தமிழ் சினிமாவில் வலம் வரும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ஆவார்.கேம் சேஞ்சர் படத்தை இன்னும் சிறப்பாக பண்ணியிருக்க வேண்டும்.... இயக்குனர் சங்கர்! இவரது இயக்கத்தின் வெளியான ஜென்டில்மேன், ஜீன்ஸ், முதல்வன், இந்தியன், அந்நியன், சிவாஜி போன்ற பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. ஆனால் கடந்த ஆண்டில் இவரது இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் சரிவை சந்தித்தது. அதைத்தொடர்ந்து சங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் கடந்த ஜனவரி 10 அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. கேம் சேஞ்சர் படத்தை இன்னும் சிறப்பாக பண்ணியிருக்க வேண்டும்.... இயக்குனர் சங்கர்!இந்த படத்தில் ராம் சரண் கதாநாயகனாக நடிக்க எஸ் ஜே சூர்யா வில்லனாக நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, சுனில், கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்க தமன் இதற்கு இசையமைத்திருந்தார். ஆக்சன் கலந்த அரசியல் படமாக வெளியான இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியானது. ஆனால் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக இயக்குனர் சங்கர் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர், “கேம் சேஞ்சர் படத்தின் அவுட்புட்டில் நான் திருப்தி அடையவில்லை. இன்னும் இந்த படத்தை நான் சிறப்பாக பண்ணி இருக்க வேண்டும். நேரமில்லாததன் காரணமாக பல நல்ல காட்சிகள் படத்திலிருந்து ட்ரிம் செய்யப்பட்டன. கேம் சேஞ்சர் படத்தின் டைரக்டர் கட் மொத்தம் 5 மணி நேரத்திற்கும் மேலாக வந்தது” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ