Homeசெய்திகள்சினிமா'தளபதி 68 இல் நான் நடிக்கிறேன்'.... கஞ்சா கருப்பு கொடுத்த அப்டேட்!

‘தளபதி 68 இல் நான் நடிக்கிறேன்’…. கஞ்சா கருப்பு கொடுத்த அப்டேட்!

-

- Advertisement -

'தளபதி 68 இல் நான் நடிக்கிறேன்'.... கஞ்சா கருப்பு கொடுத்த அப்டேட்!லியோ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு விஜய் தனது 68 வது படமான தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இதில் விஜயுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மைக் மோகன், மாளவிகா சர்மா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் தளபதி 68 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 இல் வெளியாகும் என்று செய்திகள் பரவி வருகின்றன.'தளபதி 68 இல் நான் நடிக்கிறேன்'.... கஞ்சா கருப்பு கொடுத்த அப்டேட்! அந்த வகையில் தளபதி 68 படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளை ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடிவரும் நிலையில் தற்போது புதிய வரவாக நடிகர் கஞ்சா கருப்பு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இது குறித்து கஞ்சா கருப்பு சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் “அழகிய தமிழ் மகன் மற்றும் சிவகாசி ஆகிய படங்களுக்கு பிறகு விஜய் உடன் இணைந்து தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளேன். ஆனால் எனக்கான தேதி இன்னும் கொடுக்கப்படவில்லை அதற்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

நடிகர் கஞ்சா கருப்பு தாமிரபரணி, பருத்திவீரன், நாடோடிகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ