Homeசெய்திகள்சினிமாமீண்டும் ஒரு புதிய படத்தில் இணையும் கௌதம் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ் காம்போ!

மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையும் கௌதம் மேனன் – ஹாரிஸ் ஜெயராஜ் காம்போ!

-

- Advertisement -

கௌதம் மேனன் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் காம்போ மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையும் கௌதம் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ் காம்போ!

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் கௌதம் வாசுதேவ் மேனன். கடைசியாக இவரது இயக்கத்தில் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் எனும் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதற்கிடையில் இவர், விக்ரம் நடிப்பில் இயக்கியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் நீண்ட வருடங்களாக ரிலீஸ் செய்யப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. மேலும் கௌதம் வாசுதேவ் மேனன், கார்த்தி நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையும் கௌதம் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ் காம்போ! இதற்கிடையில் இவர், விஷால் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக தகவல் வெளியானது. அதன்படி இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் நம்பப்படுகிறது. தற்போது இப்படம் குறித்த கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக இணைய உள்ளார் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையும் கௌதம் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ் காம்போ!

ஏற்கனவே கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால், வாரணம் ஆயிரம் ஆகிய பல படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைத்திருந்தார் என்பதும் அந்த படங்களில் இடம்பெற்ற பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இவர்களது காம்போ மீண்டும் இணைய இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

MUST READ