கௌதம் மேனன் தமிழ் சினிமாவில் வலம் வரும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ஆவார். இவர் மின்னலே படத்தின் மூலம் அறிமுகமாகி விண்ணைத்தாண்டி வருவாயா, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், காக்க காக்க என ஏகப்பட்ட வெற்றி படங்களை கொடுத்துள்ளார். தற்போது இவர் மம்மூட்டி நடிப்பில் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வருகின்ற ஜனவரி 23ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
#GVM in Recent Interview
– I’m directing a film based on a story written by #Vetrimaaran
– We’ve just started discussions, and the story is incredibly compelling
– #RaviMohan will be playing the lead rolepic.twitter.com/ydWJLoK2q9— Movie Tamil (@MovieTamil4) January 19, 2025
இதற்கிடையில் கௌதம் வாசுதேவ் மேனன் அடுத்ததாக விஷால் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக சொல்லப்படுகிறது. அதன்படி இந்த படமானது கடந்த 2012 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் உருவாகி வந்து பின்னர் கைவிடப்பட்ட யோஹன் படம் என்று சொல்லப்படுகிறது. அதே சமயம் கௌதம் மேனன், வெற்றிமாறன் கதையில் புதிய படம் ஒன்றை போவதாக ஏற்கனவே தகவல் கசிந்திருந்தது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இதனை உறுதி செய்துள்ளார். மேலும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இதில் நடிகர் ரவியை கதாநாயகனாக நடிக்க வைக்க திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.