Homeசெய்திகள்சினிமாகதாநாயகன் ஆகும் பிரபல இயக்குனரின் மகன்... வில்லன் ஆன கௌதம் மேனன்!

கதாநாயகன் ஆகும் பிரபல இயக்குனரின் மகன்… வில்லன் ஆன கௌதம் மேனன்!

-

‘ஹிட்லிஸ்ட்’ என்ற படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் வில்லனாக இணைந்துள்ளார். 

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வந்தவர் விக்ரமன். குடும்ப படங்கள் கொடுத்து பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றவர் விக்ரமன். தற்போது விக்ரமன் தனது மகன் கனிஷ்காவை கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார். இந்தப் படத்தை கேஎஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்கள் சூர்யகதிர் மற்றும் கார்த்திகேயன் இருவரும் இயக்குகின்றனர். படத்திற்கு ‘ஹிட்லிஸ்ட்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

இந்தப் படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஐஸ்வர்யா தத்தா, ஸ்மிருதி வெங்கட், சித்தாரா, முனீஸ்காந்த், பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா, கேஜிஎப் புகழ் கருடா ராமச்சந்திரன், அனுபமா குமார் ஆகியோரும் நடித்துள்ளனர். 

இந்நிலையில் தற்போது இயக்குனர் கௌதம் மேனன் இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கௌதம் மேனன் தற்போது பல படங்களில் வில்லனாக மிரட்டி வருகிறார்.  இதற்கிடையே ‘பத்து தல’ படத்தில் கொடூர வில்லனாக மிரட்டிய அவர், தற்போது ‘லியோ’ படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் ஹிட்லிஸ்ட் படத்திலும் இணைந்துள்ளதை படக்குழுவினர் பெருமையுடன் தெரிவித்துள்ளனர். 

MUST READ