Homeசெய்திகள்சினிமா"கௌதம் மேனன் சொன்ன கதை புடிக்கல, அதனால தான்"... மனம் திறந்த தாணு!

“கௌதம் மேனன் சொன்ன கதை புடிக்கல, அதனால தான்”… மனம் திறந்த தாணு!

-

- Advertisement -

‘வாடிவாசல்’ படத்திற்கு முன்பு கௌதம் மேனன் இயக்கத்தில் தான் சூர்யா நடிக்க இருந்ததாக படத்தின் தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.

‘விடுதலை’ படத்தை முடித்துள்ள வெற்றிமாறன் தற்போது ‘வாடிவாசல்’ படத்திற்கு முழுவீச்சில் தயாராகி வருகிறார். இந்தப் படத்திற்காக சூர்யா காளைகளை அடக்கும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்தப் படத்திற்கான சோதனை படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.

இந்நிலையில் சமீபத்தில் வாடிவாசல் படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் தாணு  காளைகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக மட்டும் ஒரு கோடி ரூபாய் செலவழித்துள்ளோம். தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து காளைகளை கொண்டு வந்து 5 நாட்களுக்கு பயிற்சி கொடுத்து பின்பு தான் சோதனை படப்பிடிப்பு நடத்தினோம்.”.

முதலில் கௌதம் மேனன் தான் சூர்யாவை இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் சொன்ன கதையில் திருப்தி இல்லாததால் வெற்றிமாறன் உள்ளே வந்தார். அவர் சொன்ன வாக்கை காப்பாற்றி இருக்கிறார். வாடிவாசல் படம் தமிழர்களுக்கும் தமிழ் சினிமாவுக்கும் பெருமையாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

கெளதம் மேனன் மற்றும் சூர்யா கூட்டணியில் வெளியான ‘வாரணம் ஆயிரம்” மற்றும் ”நவராசா’ உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ