துருவ நட்சத்திரம் திரைப்படம் 2025 கோடையில் வெளியாகும் என கௌதம் வாசுதேவ் மேனன் அப்டேட் கொடுத்துள்ளார்.
கௌதம் வாசுதேவ் மேனன் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தற்போது மம்மூட்டி நடிப்பில் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து கௌதம் மேனன், விஷால் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் சில படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார் கெளதம் மேனன். இந்நிலையில்தான் கௌதம் மேனன் தன்னுடைய துருவ நட்சத்திரம் திரைப்படம் குறித்து பேசி உள்ளார். அதாவது கடந்த 2017 ஆம் ஆண்டு விக்ரம், ரித்து வர்மா, சிம்ரன், ராதிகா ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருந்த திரைப்படம் தான் துருவ நட்சத்திரம். இந்த படத்தை ஒன்றாக என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இதற்கு இசையமைத்திருக்கிறார். மனோஜ் பரமஹம்சா இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள இந்த படம் கடந்த 8 வருடங்களாக ஒரு சில பிரச்சனைகளால் ரிலீஸ் செய்யப்படாமல் கிடப்பில் கிடக்கிறது. இருப்பினும் கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த படம் திரைக்கு கொண்டுவரப்பட இந்த நிலையில் கடைசி நேரத்தில் இப்படம் வெளிவராமல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது. இந்நிலையில் தான் இயக்குனர் கௌதம் மேனன் துருவ நட்சத்திரம் வெளியாவதில் இருக்கும் பெரும்பாலான சிக்கல்களை தீர்த்து விட்டதாகவும் 2025 கோடையில் படத்தை வெளியிட திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. இருப்பினும் கோடையில் ரெட்ரோ, இட்லி கடை, குட் பேட் அக்லி, தக் லைஃப் போன்ற பெரிய படங்கள் வெளியாக இருப்பதால் துருவ நட்சத்திரம் திரைப்படம் அந்த படங்களுடன் போட்டி போடுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.