Homeசெய்திகள்சினிமாகாதல் மன்னன் ஜெமினி கணேசனின் பர்த்டே ஸ்பெஷல்!

காதல் மன்னன் ஜெமினி கணேசனின் பர்த்டே ஸ்பெஷல்!

-

- Advertisement -

நடிகர் ஜெமினி கணேசனின் 103 வது பிறந்தநாள் இன்று.

1970 – 80 காலகட்டங்களில் கல்லையும் காதலிக்க செய்த காதல் மன்னனாக விளங்கியவர் தான் நடிகர் ஜெமினி கணேசன். ஆரம்பத்தில் ஜெமினி ஸ்டுடியோ நிறுவனத்தில் நடிகர்களை தேர்வு செய்யும் வேலை செய்த கணேசன் என்பவர் தான் நாளடைவில் ஜெமினி கணேசனாக மாறினார்.
காதல் மன்னன் ஜெமினி கணேசனின் பர்த்டே ஸ்பெஷல்!

நடிகர் ஜெமினி கணேசன், தமிழ் திரை உலகில் புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவராக இருந்தவர். பல்வேறு வேடங்களில் நடித்து அனைவரையும் வெகுவாக கவர்ந்தவர். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆகிய இருவரும் கோலாட்சிய காலத்தில் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் தான் ஜெமினி கணேசன். ஒரு பக்கம் எம்.ஜி.ஆர்-ம் சிவாஜி கணேசனும் தனது நடிப்பினால் ரசிகர்களை வசீகரிக்க, இன்னொரு பக்கம் ஜெமினி கணேசன் காதல் படங்களின் மூலமாக தனி சாம்ராஜ்யத்தையே நடத்தினார். காதல், குடும்பம், சென்டிமென்ட் என அனைத்திலும் தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை நிரூபித்தவர். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 200க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார்.காதல் மன்னன் ஜெமினி கணேசனின் பர்த்டே ஸ்பெஷல்!

ஜெமினி கணேசன், கடந்த 1947 ஆம் ஆண்டு கொத்தமங்கலம் சுப்பு இயக்கத்தில் வெளியான மிஸ் மாலினி என்ற படத்தின் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் தாய் உள்ளம் என்ற படத்தில் வில்லனாக நடித்தார். 1954இல் வெளியான மனம் போல மாங்கல்யம் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக திரையில் தோன்றினார் ஜெமினி கணேசன்.

ஆரம்பத்தில் இவர் நடிப்பில் வெளியான சில படங்கள் வெற்றி அடைந்தாலும் ரசிகர்கள் மத்தியில் ஜெமினி கணேசனின் பெயர் கவனம் பெறவில்லை. ஆனால் தொடர்ந்து தனது விடாமுயற்சியினால் வித்தியாசமான வேடங்களை ஏற்று நடித்து, குறிப்பாக காதல் என்ற தனி டிராக் அமைத்து, மக்கள் மத்தியில் காதல் மன்னன் என்ற பட்டத்தை பெற்றார். கல்யாண பரிசு, கொஞ்சும் சலங்கை, தேன்நிலவு, சாந்தி நிலையம் உள்ளிட்ட படங்கள் ஜெமினி கணேசனின் மிகப்பெரிய வெற்றி படங்களாகும். இவர் ஜெயலலிதா, சரோஜாதேவி, சாவித்திரி உள்ளிட்ட முன்னணி நடிகைகளுடன் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்.காதல் மன்னன் ஜெமினி கணேசனின் பர்த்டே ஸ்பெஷல்!

அன்றைய காலகட்டத்தில் ஜெமினி கணேசனுக்கு ஏராளமான பெண் ரசிகர்களும் இருந்தார்கள். சினிமாவில் காதல் மன்னன் என்ற பட்டம் பெற்றதைப் போல் நிஜ வாழ்க்கையிலும் காதல் மன்னனாகவே வாழ்ந்தார். அதன்படி இவரின் நிஜ வாழ்க்கையில் நான்கு திருமணங்கள் செய்து கொண்டார். அதில் மூன்றாவதாக நடிகை சாவித்திரியை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.காதல் மன்னன் ஜெமினி கணேசனின் பர்த்டே ஸ்பெஷல்!

தொடர்ந்து கதாநாயகனாக நடித்து திரையுலகை கலக்கி வந்த ஜெமினி கணேசன் மேட்டுக்குடி (1996), உன்னால் முடியும் தம்பி (1988), அவ்வை சண்முகி(1996) உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இளைய தலைமுறையினருக்கும் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டினார். இவர் தனது சிறந்த நடிப்பிற்காக பல விருதுகளை அள்ளி இருக்கிறார். அந்த வகையில் பத்மஸ்ரீ விருது, கலைமாமணி விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட விருதுகள் இவரால் பெருமை அடைந்தன. இவ்வாறு சாதாரண வேலை பார்த்து தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கி தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக வாழ்ந்து மறைந்த காதல் மன்னன் ஜெமினி கணேசனின் பிறந்த தினமான இன்று அவரின் புகழை எண்ணி வாழ்த்தி வணங்குவோம்.

MUST READ