குட் பேட் அக்லி படத்தின் அப்டேட் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் அஜித் ஏராளமான ரசிகர்களால் அன்று முதல் இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி ரூ. 60 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் நடிகர் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 63வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு குட் பேட் அக்லி என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அதன்படி இப்படம் 2025 ஏப்ரல் 10 அன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் இப்படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இருந்தபோதிலும் இந்த படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி இப்படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாகும் என சமீபகாலமாக செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் இது குறித்த கூடுதல் தகவல் என்னவென்றால், குட் பேட் அக்லி படத்தின் டீசர் அல்லது வேறு ஏதேனும் ஒரு அப்டேட் வருகின்ற பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.