Homeசெய்திகள்சினிமா25 நாட்களை கடந்து வெற்றிநடை போடும் கில்லி

25 நாட்களை கடந்து வெற்றிநடை போடும் கில்லி

-

- Advertisement -
விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகி தமிழ் சினிமாவில் மாபெரும் ஹிட்டை கொடுத்த திரைப்படம் கில்லி. கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகிகடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. கோலிவுட்டின் அடையாளங்களில் ஒரு முக்கியப் படமாக அமைந்தது கில்லி திரைப்படம். இத்திரைப்படம் விஜய்யின் சினிமா வாழ்வில் மாபெரும் திருப்பு முனையாக அமைந்தது. வேலு, தனலட்சுமி, முத்துப்பாண்டி ஆகிய கதாபாத்திரங்கள் இன்று வரை தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும் கதாபாத்திரங்களாக மாறின.

இத்திரைப்படத்தை தரணி இயக்கி இருந்தார். கில்லி படத்திற்கு முன்பாக எதிரும், புதிரும், தில்,, தூள் ஆகிய படங்களை இயக்கினார். இதில் விக்ரம் நடித்த தில், தூள் இரண்டுமே மாபெரும் ஹிட் படங்களாக அமைந்தன. இதைத் தொடர்ந்து அவர் இயக்கி குருவி மற்றும் ஒஸ்தி படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அடுத்து கடந்த 13 ஆண்டுகளாக படங்கள் எதுவும் அவர் இயக்கவில்லை. தற்போது கில்லி திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது. இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

திரைப்படம் மறுவெளியீடு ஆன போதிலும், படம் மீண்டும் ஹிட் அடிக்கிறது. வசூலிலும் பட்டையை கிளப்பி வருகிறது. குறிப்பாக இத்திரைப்படம் சுமார் 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

MUST READ