ஏழு கடல் ஏழு மலை படத்திலிருந்து முதல் காணொலி வெளியீடு
- Advertisement -
நிவின்பாலி, சூரி மற்றும் அஞ்சலி நடிப்பில் உருவாகியிருக்கும் ஏழு கடல் ஏழு மலை படத்திலிருந்து புதிய காணொலி யெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

இயக்குநர் ராமுக்கென்றே தமிழகத்தில் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதற்கு முன் இவரது இயக்கத்தில் வெளிவந்த கற்றது தமிழ், தங்க மீன், தரமணி, பேரன்பு உள்ளிட்ட படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்ததாக அவர் இயக்கும் புதிய திரைப்படம் ஏழு கடல் ஏழு மலை. இதில் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி, சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தில் சில போஸ்டர்கள் தவிர ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு எதுவுமே வெளியாகமல் இருந்தது. இப்படத்திற்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்தது. நெதர்லாந்தில் உள்ள ரோட்டர்டாம் நகரில் நடைபெற உள்ள உலகப் புகழ்பெற்ற “இன்டர்நேஷனல் ஃபிலிம் பெஸ்டிவல்” நிகழ்ச்சியில் இப்படத்தை திரையிட அதிகாரப்பூர்வமாக தேர்தெடுக்கப்பட்டது. இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். சுரேஷ் காமாட்சி இந்த படத்தை இயக்கி இருக்கிறார்
இந்நிலையில், ஏழு கடல் ஏழு மலை படத்திலிருந்து புதிய கிளிம்ஸ் காணொலி வெளியாகி உள்ளது. இது இணையத்தில் வைரலாகி வருகிறது.