கோவா சர்வதேச திரைப்பட விழா தேதி அறிவிப்பு
ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம் சார்பில் 54-வது இந்திய மற்றும் சர்வதேச திரைப்பட விழா மேல் நடைபெற உள்ளது. கோவாவில் நடைபெற இருக்கும் இந்த விழாவில் ஏராளமான இந்திய மற்றும் சர்வதேச அளவிலான திரை நட்சத்திரங்கள் கலந்து கொள்ள உள்ளனர். பிரான்ஸ் மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மிக முக்கியமான படைப்பாளர்கள் இதில் கலந்து கொள்வார்கள்.
இந்த நிகழ்ச்சியில் தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படம் மற்றும் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையிட தேர்வு செய்யப்பட்டு உள்ளன. சிறந்த படங்கள் மற்றும் இயக்குனர்களுக்கு சரியான அங்கீகாரம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுவார்கள்.
இந்நிலையில், நிகழ்ச்சி நடைபெறும் நாட்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவா சர்வதேச திரைப்பட விழா, வரும் நவம்பர் 20-ம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.