Homeசெய்திகள்சினிமாமலேசியாவில் நடைபெறும் 'கோட்' ஆடியோ லான்ச்.... லேட்டஸ்ட் அப்டேட்!

மலேசியாவில் நடைபெறும் ‘கோட்’ ஆடியோ லான்ச்…. லேட்டஸ்ட் அப்டேட்!

-

- Advertisement -

நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்திற்கு பிறகு தி கோட் படத்தில் நடித்து வருகிறார். மலேசியாவில் நடைபெறும் 'கோட்' ஆடியோ லான்ச்.... லேட்டஸ்ட் அப்டேட்!இந்தப் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் யுவன் சங்கர் ராஜாவின் இசையிலும் இந்த படம் உருவாகி வருகிறது. படத்தில் விஜயுடன் இணைந்து பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், சினேகா, லைலா, மைக் மோகன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். படத்தின் படப்பிடிப்பு ரஷ்யா, திருவனந்தபுரம், துபாய் போன்ற பல பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதை தொடர்ந்து விசில் போடு பாடலும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அடுத்ததாக படத்தின் இரண்டாவது பாடல் ஜூன் மாதத்தில் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. மேலும் தி கோட் படம் செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் நடைபெறும் 'கோட்' ஆடியோ லான்ச்.... லேட்டஸ்ட் அப்டேட்!தற்போது கிட்டத்தட்ட இறுதி கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ள கோட் படத்தின் ஆடியோ லான்ச் மலேசியாவில் நடைபெற இருப்பதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. ஏற்கனவே விஜயின் லியோ பட இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்ட நிலையில் கடைசி கட்டத்தில் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

MUST READ