Homeசெய்திகள்சினிமா'தளபதி 69' படத்தில் இணைந்த கோட் படக்குழு.... முதல் பாடல் குறித்த அப்டேட்!

‘தளபதி 69’ படத்தில் இணைந்த கோட் படக்குழு…. முதல் பாடல் குறித்த அப்டேட்!

-

நடிகர் விஜய், கோட் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தளபதி 69 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைக்க இருக்கிறார். 'தளபதி 69' படத்தில் இணைந்த கோட் படக்குழு.... முதல் பாடல் குறித்த அப்டேட்!ஹெச். வினோத் இந்த படத்தை தயாரிக்க உள்ளார். அரசியல்வாதியாக உருவெடுத்துக்கும் நடிகர் விஜயின் கடைசி திரைப்படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதே சமயம் இந்த படத்தில் விஜயுடன் இணைந்து நடிக்கப் போகும் நடிகர்கள் குறித்த எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருக்கிறது. அதன்படி நேற்று (அக்டோபர் 1) தளபதி 69 படத்தில் நடிகர் பாபி தியோல் இணைந்திருப்பதாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இன்னும் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் வருகின்ற அக்டோபர் 4, தளபதி 69 படத்தின் பூஜை தொடங்கப்படும் எனவும் அக்டோபர் 5ஆல் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது முதல் பாடல் காட்சிகளுடன் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. 'தளபதி 69' படத்தில் இணைந்த கோட் படக்குழு.... முதல் பாடல் குறித்த அப்டேட்!அதன்படி நடன இயக்குனர் சேகர், தளபதி 69 படத்தின் முதல் பாடலில் பணியாற்ற இருப்பதாக புதிய தகவல் வெளிவந்துள்ளன. இவர் ஏற்கனவே கோட் படத்தில் விஜய் – திரிஷா நடனமாடிய மட்ட பாடலுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ