Homeசெய்திகள்சினிமாவிசில் போடு... கோட் பட பாடல் நிகழ்த்திய சாதனை...

விசில் போடு… கோட் பட பாடல் நிகழ்த்திய சாதனை…

-

- Advertisement -
விசில் போடு பாடல் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் சுமார் 25 மில்லியன் பார்வைகளை கடந்து, சாதனை படைத்துள்ளது.

லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு கோட் என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் ஜெயராம், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, மைக் மோகன், அஜ்மல் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இது விஜய் நடிக்கும் 68-வது படமாகும் இதில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் முதல் தோற்றம் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. இத்திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை ஒட்டி திரையரங்குகளில் வௌியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் படமாக்கப்பட்டு வருகிறது. விரைவில் படப்பிடிப்பு முடிவடைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், யுவன் சங்கர் ராஜா இசையில் கோட் படத்தின் முதல் பாடல் கடந்த 14-ம் தேதி சமூக வலைதளங்களில் வெளியானது. இப்பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதன்படி, பாடல் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் சுமார் 25 மில்லியன் பார்வைகளை கடந்து, சாதனை படைத்துள்ளது. அரபிக்குத்து பாடலையும் பின்தள்ளி புதிய சாதனை படைத்திருக்கிறது.

MUST READ