Homeசெய்திகள்சினிமா'கோட்' மட்ட பாடல்... திரிஷாவின் காஸ்டியூமுக்கு பின்னால் இருக்கும் ரகசியம் ...வெங்கட் பிரபு சொன்னது என்ன?

‘கோட்’ மட்ட பாடல்… திரிஷாவின் காஸ்டியூமுக்கு பின்னால் இருக்கும் ரகசியம் …வெங்கட் பிரபு சொன்னது என்ன?

-

கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி விஜய் நடிப்பில் கோட் என்று சொல்லப்படும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனும் திரைப்படம் வெளியானது.'கோட்' மட்ட பாடல்... திரிஷாவின் காஸ்டியூமுக்கு பின்னால் இருக்கும் ரகசியம் ...வெங்கட் பிரபு சொன்னது என்ன? இந்த படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று அமோகமான வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் காண்பிக்கப்பட்டார். அடுத்தது சிவகார்த்திகேயன், திரிஷா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். இந்த காட்சிகள் அனைத்தும் ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் தந்தது. 'கோட்' மட்ட பாடல்... திரிஷாவின் காஸ்டியூமுக்கு பின்னால் இருக்கும் ரகசியம் ...வெங்கட் பிரபு சொன்னது என்ன?அதிலும் விஜய் மற்றும் திரிஷா நடனமாடும் மட்ட பாடல் ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்தது. அந்த பாடலில் நடிகை திரிஷா மஞ்சள் நிற சேலையில் வந்தது பலருக்கும் 96 படத்தை நினைவுப்படுத்தியது. அதாவது அந்த படத்தில் நடிகை திரிஷா மஞ்சள் நிற சுடிதாரில் நடித்திருப்பார். அடுத்தது திரிஷாவின் இந்த காஸ்டியூம் விஜயின் கட்சிக்கொடி போல் இருக்கிறதே என்று பலரும் கமெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த போட்டியில் வெங்கட் பிரபு இது குறித்து பேசி இருக்கிறார். 'கோட்' மட்ட பாடல்... திரிஷாவின் காஸ்டியூமுக்கு பின்னால் இருக்கும் ரகசியம் ...வெங்கட் பிரபு சொன்னது என்ன?அப்போது, “அந்தப் பாடலுக்கு நடிகை திரிஷா மஞ்சள் நிற புடவை கட்டி நடனம் ஆட வேண்டும் என்று படப்பிடிப்பு தளத்தில் தான் நான் முடிவு செய்தேன். அதே சமயம் அது முழுக்க முழுக்க மஞ்சள் நிறமாக இருந்ததால் அது இயக்குனர் மிஷ்கின் ஸ்டைல் பாடலாக ஆகிவிடும் என்றும் யோசித்தேன். அப்போதுதான் திரிஷா, இந்த மஞ்சள் நிற புடவையுடன் பிங்க் நிறத்தில் நான் ஒன்று சேர்த்துக்கொள்கிறேன். அப்படி செய்தால் அது மஞ்சள் நிற புடவையாக மட்டுமே இருக்காது என்று யோசனை சொன்னார்” என தெரிவித்துள்ளார் வெங்கட் பிரபு.

MUST READ