நடிகர் விஜய் கடைசியாக லியோ படத்தில் நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை பெற்றது. அதைத்தொடர்ந்து விஜய் தனது 68 வது திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த படமானது 2024 செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திரையிடப்பட முழு வீச்சில் தயாராகி வருகிறது. மேலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்து அதிகமாக இருந்து வருகிறது. அதனை பூர்த்தி செய்யும் விதமாக படத்தின் ஒவ்வொரு அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இந்த வகையில் ஏற்கனவே படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியான நிலையில் விசில் போடு எனும் முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது. அடுத்ததாக விஜயின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு கோட் படத்தின் இரண்டாவது பாடலும் டீசரும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விஜய்யின் ஐம்பதாவது பிறந்த நாள் என்பது ரசிகர்களுக்கு மிகவும் ஸ்பெஷல் தான்.
Start Waiting … first update at Noon 🙌🏼
— Archana Kalpathi (@archanakalpathi) June 21, 2024
எனவே அதனை கூடுதல் ஸ்பெஷலாக மாற்ற பட குழுவினரும் முடிவு செய்துள்ளனர். இதன்படி இன்று நண்பகல் கோட் படத்தின் முதல் அப்டேட் வெளியாகும் என்று அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். எனவே ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக பல அப்டேட்டுகள் வெளிவர காத்திருக்கின்றன. விஜயின் இந்த 50வது பிறந்தநாள் ரசிகர்களுக்கும் முக்கியமான நாளாக இருக்கப் போகிறது என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.