விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். GOAT என்று அழைக்கப்படும் இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்ததாக பட குழு ரஷ்யா பறக்க உள்ளது. இதற்கிடையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி கவனம் ஈர்த்தது. அதைத்தொடர்ந்து படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி நடிகர் விஜய் இந்த படத்தில் பாடல் ஒன்றை பாடி இருப்பதாகவும் திரிஷா பாடல் ஒன்றுக்கு நடனமாடியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியிட பட குழுவினர் திட்டமிட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது. அதேசமயம் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு போஸ்டருடன் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. எனவே பாடலின் அறிவிப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து சினேகா, லைலா, பிரசாந்த் பிரபுதேவா, உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தில் மைக் மோகன் வில்லனாக நடிப்பதாக இந்த படத்தில் மைக் மோகன் வில்லனாக நடித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -