Homeசெய்திகள்சினிமாஇன்னும் சில மணி நேரங்களில் வெளியாகும் 'கோட்' படத்தின் ரிலீஸ் ப்ரோமோ!

இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகும் ‘கோட்’ படத்தின் ரிலீஸ் ப்ரோமோ!

-

கோட் படத்தின் ரிலீஸ் ப்ரோமோ வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகும் 'கோட்' படத்தின் ரிலீஸ் ப்ரோமோ!

நடிகர் விஜயின் நடிப்பில் மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் தி கோட். தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படம் நாளை (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதற்கான முழு ஏற்பாடுகளும் ப்ரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதாவது கிட்டத்தட்ட 5000க்கும் மேலான திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. படத்தில் விஜய் தவிர பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மைக் மோகன், மீனாட்சி சௌத்ரி, ஜெயராம், வைபவ், பிரேம்ஜி என பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பாக டிரைலரும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. ஆக்சன் நிறைந்த கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருப்பது படத்தின் எதிர்பார்ப்பிற்கு முக்கிய காரணம். ஏனென்றால் இதில் நடிகர் விஜய் நெகட்டிவ் ஷேடட் ரோலில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அடுத்தது மறைந்த அரசியல்வாதியும் பிரபல நடிகருமான கேப்டன் விஜயகாந்த் இந்த படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் காண்பிக்கப்பட இருக்கிறார். இவ்வாறு ஒவ்வொரு அப்டேட்டுகளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை துளி அளவும் குறைய விடாமல் இன்னும் அதிகமாக தூண்டி விடுகிறது. இந்நிலையில் கோட் படத்தின் ரிலீஸ் ப்ரோமோ (செப்டம்பர் 4) இன்று மாலை 6 மணி அளவில் வெளியாகும் என பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ