Homeசெய்திகள்சினிமாஇந்த மாத இறுதியில் சம்பவத்தை தொடங்கும் 'குட் பேட் அக்லி'.... படக்குழு கொடுத்த அப்டேட்!

இந்த மாத இறுதியில் சம்பவத்தை தொடங்கும் ‘குட் பேட் அக்லி’…. படக்குழு கொடுத்த அப்டேட்!

-

- Advertisement -

குட் பேட் அக்லி படத்தின் அப்டேட் இந்த மாத இறுதியில் வெளியாகும் என அப்டேட் கிடைத்துள்ளது.
இந்த மாத இறுதியில் சம்பவத்தை தொடங்கும் 'குட் பேட் அக்லி'.... படக்குழு கொடுத்த அப்டேட்!

அஜித்தின் 63வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இந்த படத்தை மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைக்கிறார். ஆக்ஷன் கலந்த கேங்ஸ்டர் படமாக உருவாகும் இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில், பிரபு மற்றும் பலர் நடிக்கின்றனர். மார்க் ஆண்டனி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி படம் தொடர்பான ஒவ்வொரு அப்டேட்டுகளையும் ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் தான் ஏற்கனவே இந்த படத்தில் நடிகர் அஜித் தீனா பட லுக்கில் நடித்திருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே 2025 ஏப்ரல் 10 அன்று இந்த படத்தை திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும் இந்த படத்தின் டீசர் கடந்த காதலர் தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்நாளில் டீசர் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் தான் படக்குழுவிடமிருந்து அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதில், இந்த மாதம் இறுதியில் குட் பேட் அக்லி படம் தொடர்பான நல்ல செய்தி வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மாத இறுதியில் சம்பவத்தை தொடங்கும் 'குட் பேட் அக்லி'.... படக்குழு கொடுத்த அப்டேட்!

இதன் மூலம் இந்த மாத இறுதியில் இருந்து குட் பேட் அக்லி படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் அறிந்த ரசிகர்களும் இப்பொழுதே கொண்டாட தயாராகி விட்டார்கள்.

MUST READ