நடிகர் அஜித் துணிவு படத்திற்கு பிறகு விடாமுயற்சி திரைப்படத்தில் கமிட்டானார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு கடந்த 2023 இல் வெளியாகி அதன் பின்னர் சில மாதங்கள் கழித்து படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டது. அஜர்பைஜானில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்ற நிலையில் இதன் இறுதி கட்ட படப்பிடிப்புகள் இந்த ஜூன் மாதம் இறுதியில் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 63 வது படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அதன்படி இந்த படத்திற்கு குட் பேட் அக்லி என்று தலைப்பு வைக்கப்பட்டது. இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்து வருகிறார்.
அதேசமயம் இந்த படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடிப்பதாகவும் படத்தில் அஜித்துடன் இணைந்து நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாகவும் சமீப காலமாக செய்திகள் பரவி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த மே 10 அன்று ஐ தொடங்கி சைலண்டாக நடந்து வந்தது. தற்போது முதற்கட்ட படப்பிடிப்பின் கடைசி நாள் படப்பிடிப்பு நேற்று (ஜூன் 7) இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை நடைபெற்று முடிந்துள்ளது. எனவே படப்பிடிப்பை முடித்த நடிகர் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் மற்ற படக்குழுவினருடன் இணைந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.
இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் நடிகர் அஜித் விடாமுயற்சி படத்தின் இறுதி கட்டப்பட படிப்பை முடித்த பின்னர் குட் பேட் அக்லி படத்திற்காக படக்குழுவுடன் ஜப்பான் செல்ல உள்ளார் என்று செய்திகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -