Homeசெய்திகள்சினிமாமும்பையில் தொடங்கப்பட்ட 'குட் பேட் அக்லி' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு!

மும்பையில் தொடங்கப்பட்ட ‘குட் பேட் அக்லி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு!

-

குட் பேட் அக்லி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.மும்பையில் தொடங்கப்பட்ட 'குட் பேட் அக்லி' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு!

நடிகர் அஜித் துணிவு திரைப்படத்திற்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏறத்தாழ 90 சதவீதம் நிறைவடைந்த நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர தயாராகி வருகிறது. அதே சமயம் நடிகர் அஜித், மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, பிரபு, அர்ஜுன் தாஸ், சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பையில் தொடங்கப்பட்ட 'குட் பேட் அக்லி' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு!அதன்படி ஐதராபாத், ஸ்பெயின், பல்கேரியா ஆகிய பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்று (டிசம்பர் 14) மும்பையில் தொடங்கப்பட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தது அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வருவதால் குட் பேட் அக்லி திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ