Homeசெய்திகள்சினிமா'குட் பேட் அக்லி' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இங்கதான்!

‘குட் பேட் அக்லி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இங்கதான்!

-

நடிகர் அஜித் ஒரு பக்கம் படங்களில் நடித்து வந்தாலும் இன்னொரு பக்கம் கார், பைக் ரேஸ்களிலும் கலந்து கொண்டு வருகிறார். ஆனாலும் துணிவு திரைப்படம் வெளியாகி ஓராண்டுக்கு மேலாகிவிட்டதால் நடிகர் அஜித்தை திரையில் கண்டு கொண்டாட ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். 'குட் பேட் அக்லி' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இங்கதான்!அதன்படி ஏற்கனவே அஜித் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி போன்ற படங்கள் உருவாகி வருகிறது. விடாமுயற்சி திரைப்படம் ஏறத்தாழ நிறைவடைந்த நிலையில் பாடல் காட்சி ஒன்று இன்னும் படமாக்கப்பட இருக்கிறது. ஒரு சில காரணங்களால் அந்தப் பாடல் தொடர்பான படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. மேலும் விடாமுயற்சி திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதே பொங்கலில் குட் பேட் அக்லி படமும் வெளியாகும் என படக்குழு வெளியிடும் ஒவ்வொரு போஸ்டர்களிலும் குறிப்பிட்டு வருகிறது. 'குட் பேட் அக்லி' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இங்கதான்!எனவே அஜித்தின் ஏதாவது ஒரு படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வரும் என்பதில் சந்தேகமில்லை. தற்போது அஜித், திரிஷா இருவரும் குட் பேட் அக்லி படத்தில் பிசியாக நடித்து வருகிறார்கள். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பை ஏற்கனவே ஐதராபாத், ஸ்பெயின் போன்ற பகுதிகளில் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்தது இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளிவரும் என்று நம்பப்படுகிறது.

MUST READ