Homeசெய்திகள்சினிமாவெற்றி நடைபோடும் 'குட் பேட் அக்லி'.... அஜித்தை தேடி வரும் தயாரிப்பாளர்கள்!

வெற்றி நடைபோடும் ‘குட் பேட் அக்லி’…. அஜித்தை தேடி வரும் தயாரிப்பாளர்கள்!

-

- Advertisement -

அஜித் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி குட் பேட் அக்லி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.வெற்றி நடைபோடும் 'குட் பேட் அக்லி'.... அஜித்தை தேடி வரும் தயாரிப்பாளர்கள்! மார்க் ஆண்டனி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஆதிக் இயக்கியிருந்த இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வந்தது. அதே சமயம் விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்களை திருப்தி படுத்தாத நிலையில் அஜித்தின் தீவிர ரசிகனான ஆதிக் ரவிச்சந்திரன், குட் பேட் அக்லி படத்தில் அஜித்தை எப்படி காட்டியிருப்பார்? என்பதைக் காண மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்தனர். அதன்படி இந்த படத்தை திரைக்கு வந்த முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். வெற்றி நடைபோடும் 'குட் பேட் அக்லி'.... அஜித்தை தேடி வரும் தயாரிப்பாளர்கள்!இப்படம் ஜெனரல் ஆடியன்ஸ் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக அடித்து நொறுக்கி வருகிறது. இந்த வகையில் இப்படம் ஐந்தே நாட்களில் ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது என சொல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து அஜித் – ஆதிக் கூட்டணியில் புதிய படம் உருவாகப் போவதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. ஆகையினால் பெரிய சம்பவத்திற்கு ரசிகர்கள் இப்பொழுதே தயாராகி வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் அஜித்தை இயக்க ஏகப்பட்ட இயக்குனர்கள் வரிசை கட்டி நிற்கின்றனர். அதில் தனுஷும் ஒருவர். வெற்றி நடைபோடும் 'குட் பேட் அக்லி'.... அஜித்தை தேடி வரும் தயாரிப்பாளர்கள்!அதே வேளையில் அஜித் படத்தை தயாரிக்கவும் பல தயாரிப்பாளர்கள் அஜித்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதன்படி வேல்ஸ் ஃபிலிம், ரெட் ஜெயன்ட், கேவிஎன் புரொடக்ஷன்ஸ், டான் பிக்சர்ஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகிய நிறுவனங்கள் அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்க போட்டி போடுவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அஜித்தின் அடுத்த படத்தை யார் தயாரிக்கப் போகிறார்? யார் இயக்கப் போகிறார்? என்பது தொடர்பான அப்டேட்கள் அனைவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ