ஆதிக் ரவிச்சந்திரன் தமிழ் சினிமாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து இவர் அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகீரா ஆகிய படங்களை இயக்கினார். இருப்பினும் விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா கூட்டணியில் இவர் இயக்கியிருந்த மார்க் ஆண்டனி படம் தான் இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்து பட்டைய கிளப்பி இருந்தார். விஷாலுக்கும் இந்த படம் சிறந்த கம்பேக் படமாக அமைந்த நிலையில் இப்படம் கிட்டத்தட்ட ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதாவது மார்க் ஆண்டனி படத்திற்கு பிறகு நடிகர் விஷால், ரத்னம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அதைத்தொடர்ந்து துப்பறிவாளன் 2 திரைப்படத்தை தானே இயக்கி நடிக்கப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார் விஷால்.
ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு இதுவரை தொடங்கப்படவில்லை. எனவே தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் துப்பறிவாளன் 2 திரைப்படம் தொடங்க தாமதமானால் நடிகர் விஷால் மார்க் ஆண்டனி 2 படத்தில் நடிக்க திட்டம் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் நடிப்பில் உருவாகும் குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில் அடுத்ததாக மார்க் ஆண்டனி 2 திரைப்படத்திற்கான பணிகளை கையில் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.