நடிகர் அஜித் கடைசியாக எச் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற அதைத்தொடர்ந்து விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். படமானது கிட்டத்தட்ட 50 சதவீதம் நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் நடிகர் அஜித், மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 63வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு குட் பேட் அக்லி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையிலும் இந்தப் படம் உருவாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி படமானது ஜூன் மாதத்தில் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சமீபத்தில் வெளியான தகவலின் படி குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு வருகின்ற மே 10ஆம் தேதி ஐதராபாத்தில் தொடங்க இருக்கிறதாம். ஆனால் அஜித் இல்லாமல் இந்த படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் அஜித் ஜூன் மாதத்தில் தான் இந்த படப்பிடிப்பில் பங்கேற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏனெனில் ஏனெனில் இந்த மே மாதத்தில் அஜித் விடாமுயற்சி படப்பிடிப்புக்கு செல்கிறாராம். அவருடைய லுக் மாறிவிடக் கூடாது என்பதற்காக முதலில் விடாமுயற்சியை முடித்துவிட்டு அடுத்ததாக குட் பேட் அக்லி படத்தில் இணைவார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.