குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
திரிஷா இல்லனா நயன்தாரா, பஹுரா, மார்க் ஆண்டனி ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்ததாக அஜித் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு குட் பேட் அக்லி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் அஜித்தின் 63 வது படமாகும். இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கப்பட்டது. அதன்படி ஐதராபாத், ஸ்பெயின் போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது பல்கேரியாவில் இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு வருகின்ற நவம்பர் 23 அல்லது 24 வரை நடைபெறும் எனவும் அதன் பின்னர் படக்குழு இந்தியா திரும்ப இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என நம்பப்படுகிறது.