Homeசெய்திகள்சினிமாஅஜித் பிறந்தநாளில் வெளியாகும் 'குட் பேட் அக்லி' ..... லேட்டஸ்ட் அப்டேட்!

அஜித் பிறந்தநாளில் வெளியாகும் ‘குட் பேட் அக்லி’ ….. லேட்டஸ்ட் அப்டேட்!

-

- Advertisement -

குட் பேட் அக்லி திரைப்படம் அஜித் பிறந்தநாளில் வெளியாகும் என புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.அஜித் பிறந்தநாளில் வெளியாகும் 'குட் பேட் அக்லி' ..... லேட்டஸ்ட் அப்டேட்!

நடிகர் அஜித் துணிவு திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட நிறைவடைந்த நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் தொடங்கப்பட்ட விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதே சமயம் நடிகர் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 63வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு குட் பேட் அக்லி என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் நிலையில் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், ஸ்பெயின் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அஜித் பிறந்தநாளில் வெளியாகும் 'குட் பேட் அக்லி' ..... லேட்டஸ்ட் அப்டேட்!இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் போதே, இந்த படம் 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அறிவித்திருந்தது. ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு தள்ளி வைக்கப்படுவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. அதன்படி அடுத்த ஆண்டு மே 1ஆம் தேதி அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகும் என புதிய அப்டேட் கிடைத்துள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ