தமிழ் சினிமாவில் வலம் வரும் முக்கியமான நடிகர்களில் ஒருவர் ரவி. இவர் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான ஜெயம் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் படமே இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்று தந்தது. அதிலிருந்து இவர் ஜெயம் ரவி என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். அதே சமயம் எம். குமரன், சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்ரமணியம், தாம் தூம், பேராண்மை என பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் ரவி. அதிலும் இவருடைய நடிப்பில் வெளியான தனி ஒருவன் திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.
இருப்பினும் சமீப காலமாக வெளிவரும் சில படங்கள் ரவிக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இந்நிலையில்தான் தனது பெயரை ரவி மோகன் என்று மாற்றிக்கொண்ட இவர், சுதா கொங்கராவின் பராசக்தி, கணேஷ் கே பாபுவின் கராத்தே பாபு போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இவ்வாறு தமிழ் திரை உலகில் 20 ஆண்டுகளைக் கடந்து பயணித்து வருகிறார்.
இந்நிலையில் இவருடைய நடிப்பில் வெளியான ஜெயம், எம். குமரன் ஆகிய படங்கள் விரைவில் ரீ ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது. மேலும் இந்த தகவல் ரவி மோகன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.
- Advertisement -