Homeசெய்திகள்சினிமாசிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த 'குட் நைட்' பட இயக்குனர்.... 'SK 24' லோடிங்!

சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ‘குட் நைட்’ பட இயக்குனர்…. ‘SK 24’ லோடிங்!

-

- Advertisement -

குட் நைட் பட இயக்குனர் விநாயக் சந்திரசேகரன், சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த 'குட் நைட்' பட இயக்குனர்.... 'SK 24' லோடிங்!

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜெய் பீம் மணிகண்டன் நடிப்பில் குட் நைட் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை விநாயக் சந்திரசேகரன் இயக்கியிருந்தார். குறட்டை சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் என்ன படம் இயக்கப் போகிறார்? என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக விநாயக் சந்திரசேகரன், சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்து கதை சொல்லி இருப்பதாகவும் அதற்கு சிவகார்த்திகேயன் ஓகே சொல்லிவிட்டதாகவும் தகவல் வெளியானது. அதன் பின்னர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி வருவதனால் இவர்களது கூட்டணியில் உருவாகும் புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில்தான் சிவகார்த்திகேயனின் 24 வது படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கவில்லை எனவும் விநாயக் சந்திரசேகரன் தான் இயக்கப் போகிறார் எனவும் சமீபகாலமாக தொடர்ந்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தற்போது இந்த தகவலை இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளார். அதாவது சிவகார்த்திகேயன் இன்று (பிப்ரவரி 17) தன்னுடைய 40வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

எனவே சிவகார்த்திகேயனுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா.. எங்களை ஊக்கப்படுத்துங்கள்” என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றினையும் வெளியிட்டுள்ளார் விநாயக் சந்திரசேகரன்.

இதன் மூலம் சிவகார்த்திகேயன், விநாயக் சந்திரசேகரன் காம்போவில் உருவாகும் SK 24 இந்த ஆண்டில் தொடங்கப்படும் எனவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ