Homeசெய்திகள்சினிமாகுட் நைட் பட இயக்குநருக்கு திருமணம்.... பிரபலங்கள் வாழ்த்து...

குட் நைட் பட இயக்குநருக்கு திருமணம்…. பிரபலங்கள் வாழ்த்து…

-

குட் நைட் பட இயக்குநர் விநாயக் சந்திரசேகரனுக்கு திருமணம் நடைபெற்று முடிந்தது.

கடந்த ஆண்டு மே மாதம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் குட் நைட். இப்படத்தின் மூலம் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார் விநாயக் சந்திரசேகரன். ஜெய் பீம் பட புகழ், மணிகண்டன் இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். மீதா ரகுநாத் மணிகண்டனுக்கு ஜோடியாக நடிக்க, பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், பக்ஸ், ஜெகன் கிருஷ்ணன், ரேச்சல் ரெபேகா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்

ஒரு மனிதனுக்கு ஏற்படும் குறட்டை பிரச்சனையால் எந்த மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதை பின்னணியாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டது. கடந்த மே 12ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களுடைய நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் விநாயக், சிவகார்த்திகேயனை இயக்குவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இயக்குநர் விநாயக் சந்திரசேகரனுக்கு திருமணம் நடைபெற்று முடிந்தது. ப்ரியா என்பவருடன் அவருக்கு திருமணம் நடைபெற்றது. அதில் குட் நைட் படக்குழுவினர் மணிகண்டன், ரமேஷ் திலக் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திரைப்பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

MUST READ