விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. இதைத் தொடர்ந்து விஜயகாந்த் காய்ச்சல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் கடந்த நவம்பர் 18-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். சில நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மியாட் மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் விஜயகாந்துக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், அவர் குணமடைந்து வீடு திரும்பினார். தேமுதிக கட்சி நிகழ்ச்சிகளிலும் அவர் திடமாக கலந்து கொண்டார். இந்நிலையில், திடீரென அவர் எதிர்பாராத விதமாக இன்று காலை உயிரிழந்தார். விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவரது உடல் கோயம்பேடு அருகே உள்ள தேமுதிக அலுவலக்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமனி விஜயகாந்த் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
Peace be unto the soul of a great actor, a just politician and a kind human being – Vijayakanth sir. My heart goes out to his family, friends, fans and everyone who shares the pain of his loss.
Om Shanti🙏 pic.twitter.com/F5mEhIqB9u
— Mohanlal (@Mohanlal) December 28, 2023