நகைச்சுவை நடிகர் கவுண்டமணி நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நகைச்சுவை நடிகர் கவுண்டமணி திரை உலகில் 400 மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 10 படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இவர் டைமிங் காமெடியால் பல ரசிகர்களை கவர்ந்தவர்.
இந்நிலையில் இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கதாநாயகனாக புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். அந்த படத்திற்கு ஒத்த ஓட்டு முத்தையா என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் கவுண்டமணியுடன் இணைந்து ராஜேஸ்வரி யோகி பாபு மொட்ட ராஜேந்திரன் தம்பி ராமையா சிங்கம்புலி வையாபுரி மற்றும் பலர் நடிக்கின்றனர்.
சசி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை சாய் ராஜகோபால் எழுதி இயக்குகிறார். சித்தார்த் விபின் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க காமெடி கதை களத்தில் உருவாகி வருகிறது. இந்த படம் ஆறு முதல் 60 வயது வரை இருக்கும் ரசிகர்கள் அனைவரும் ரசிக்கும் வண்ணம் இருக்கும் என இந்த படம் குறித்து இயக்குனர் சாய் ராஜகோபால் தெரிவித்துள்ளார்.
மேலும் இயக்குனர் சாய் ராஜகோபால் கவுண்டமணி மற்றும் செந்தில் இருவரும் நடித்த படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.