Homeசெய்திகள்சினிமாவிளம்பரங்களில் நடிக்க மறுத்த மகேஷ் பாபு பட நடிகை

விளம்பரங்களில் நடிக்க மறுத்த மகேஷ் பாபு பட நடிகை

-

விளம்பரங்களில் நடிக்க மறுந்த மகேஷ்பாபு பட நடிகைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மகேஷ் பாபு நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் குண்டூர் காரம். தெலுங்கில் இப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தை திருவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கி உள்ளார். மகேஷ் பாபுவும், – திருவிக்ரமும் மூன்றாவது படத்திற்காக இணைந்துள்ளனர். இப்படத்தில் மகேஷ்பாபுவுடன் இணைந்து, பிரகாஷ் ராஜ், மீனாட்சி சௌத்ரி, சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் கடந்த 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை 160 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து வருகிறது.

படத்தில் மற்றொரு கதாநாயகியாக ஸ்ரீலீலா நடித்திருப்பார். தெலுங்கில் முன்னணி நடிகையாக அவர் வலம் வருகிறார். குண்டூர் காரம் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அவருக்கு தமிழிலும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தெலுங்கில் இத்திரைப்படத்திற்கு முன்பாக ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 

இந்நிலையில், சில விளம்பரங்களில் நடிக்க ஸ்ரீலீலா மறுப்பு தெரிவித்துள்ளார். அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையிலும், அவர் நடிக்க மறுத்துள்ளார். பல கோடிகளை சம்பளமாக கொடுக்க நிறுவனங்கள் முன் வந்த போதிலும் அவர் மறுப்பு தெரிவித்திருக்கிறார். எனினும், எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும், மதுபானங்கள், இணையவழி சூதாட்டங்கள் தொடர்பான விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று விளக்கம் அளித்துள்ளார். ஸ்ரீ லீலாவின் நெருங்கிய நண்பர்கள் வலியுறுத்திய போதிலும், அவர் நடிக்க மறுப்பு தெரிவித்ததற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

MUST READ