Homeசெய்திகள்சினிமாஜிவி பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் கூட்டணியில் உருவாகும் டியர்..... முக்கிய அப்டேட்!

ஜிவி பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் கூட்டணியில் உருவாகும் டியர்….. முக்கிய அப்டேட்!

-

- Advertisement -

ஜிவி பிரகாஷ் திரையுலகின் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவராவார். இவர் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் டியர் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை செத்தும் ஆயிரம் பொன் என்ற படத்தை இயக்கிய ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இதில் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் காளி வெங்கட், ரோகிணி, தலைவாசல் விஜய், பிளாக் ஷீப் நந்தினி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தை அபிஷேக் ராம் ஷெட்டி, வருண் திரிபுரனேனி, பிரித்திவிராஜ் உள்ளிட்டோர் இணைந்து நட்மக் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கின்றனர். ஜிவி பிரகாஷே இப்படத்தில் இசை அமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

இப்படம் குறட்டை விடும் பெண்ணை மையமாக வைத்து ஒரு ஃபேமிலி என்டர்டைன்மென்ட் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

MUST READ