Homeசெய்திகள்சினிமாஜி.வி. பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் காம்போவின் 'டியர்'..... அட்டகாசமான ட்ரெய்லர் வெளியீடு!

ஜி.வி. பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் காம்போவின் ‘டியர்’….. அட்டகாசமான ட்ரெய்லர் வெளியீடு!

-

ஜி.வி. பிரகாஷ், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வருகிறார். பல பெரிய படங்களுக்கு இசையமைத்து வரும் இவர் நடிப்பதிலும் ஆர்வமுடையவர். ஜி.வி. பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் காம்போவின் டியர்..... அட்டகாசமான ட்ரெய்லர் வெளியீடு!அதன்படி ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் கடைசியாக ரெபல், கள்வன் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள டியர் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 11ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இந்த படத்தை கடந்த 2019ல் வெளியான செத்தும் ஆயிரம் பொன் படத்தின் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன் இணைந்து ரோகிணி, தலைவாசல் விஜய், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நட்மெக் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில் ஜி.வி. பிரகாஷே இதற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு முடிவடைந்த நிலையில் தற்போது அடுத்தடுத்த பாடல்களை பட குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் அட்டகாசமான ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

இந்த ட்ரெய்லரின் மூலம் இந்த படம் குறட்டை சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருப்பது தெரிய வந்திருக்கிறது. அதாவது ஐஸ்வர்யா ராஜேஷுக்கு குறட்டைவிடும் பழக்கம் இருப்பதால் கணவன் மனைவி இருவருக்குமான உறவில் எந்த மாதிரியான சிக்கல் ஏற்படுகிறது என்பதை பற்றி கூறுவது தான் இந்த டியர் படம். இந்த ட்ரெய்லர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ