ஜி.வி. பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘டியர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜி.வி. பிரகாஷ், இசையமைப்பாளராக வலம் வரும் நிலையில் தங்கலான் போன்ற ஸ்டார் நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் சியான் 62, புறநானூறு என அடுத்தடுத்த பெரிய படங்களுக்கு இசையமைப்பாளராக கமிட்டாகி வருகிறார். அதேசமயம் ஜிவி பிரகாஷ் ஒரு நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் ஏற்கனவே கிட்டத்தட்ட 25 படங்களுக்கும் மேலாக நடித்துள்ள ஜிவி பிரகாஷ் சமீப காலமாக தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்திருக்கிறார் அந்த படங்கள் அனைத்தும் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. கடைசியாக ரெபல் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து கள்வன் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள டியர் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டியர் திரைப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இந்த படத்தை செத்தும் ஆயிரம் பொன் என்ற படத்தின் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் ரோகினி, காளி வெங்கட், தலைவாசல் விஜய் என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை நட்மக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்ததாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
You are cordially invited to witness Deepika & Arjun’s love, laughter and a snore or two!!
RSVP: APRIL 11, in cinemas near you! 💘#DeAr @tvaroon #AbhishekRamisetty #PruthvirajGK @mynameisraahul #RomeoPictures @saregamasouth @gvprakash @aishu_dil @Anand_Rchandran pic.twitter.com/LE2rnslvlK
— Nutmeg Productions (@NutmegProd) March 24, 2024
அதை தொடர்ந்து சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் இந்த படம் வருகின்ற ஏப்ரல் 11ஆம் தேதி வெளியாக இருப்பதாக பட குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.