இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், குட் பேட் அக்லி முதல் பாடலின் டைட்டில் குறித்த அப்டேட் கொடுத்துள்ளார்.
அஜித்தின் 63வது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இந்த படத்தை மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். பிரபல தெலுங்கு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். ஆக்சன் கலந்த கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் அஜித் நெகட்டிவ் ஷேடட் ரோலில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படமானது வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. அதன்படி தற்போது போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அடுத்தது இந்த படத்தின் டீசரும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இணையத்தை கலக்கியது.
OG Sambavam —- GBU track 1 name …Cookinggggggggg #OGSambavam #GBU koluthurom maaamey 🔥
— G.V.Prakash Kumar (@gvprakash) March 9, 2025
இதைத்தொடர்ந்து இப்படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும்? என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் ‘OG சம்பவம்’ என்பதுதான் குட் பேட் அக்லி படத்தின் முதல் பாடல் டைட்டில் என தெரிவித்துள்ளார். அத்துடன் கொளுத்துறோம் மாமே என்று குறிப்பிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளார்.