Homeசெய்திகள்சினிமாஜி.வி. பிரகாஷின் 'கிங்ஸ்டன்' படத்திலிருந்து 'ராசா ராசா' பாடல் வெளியீடு!

ஜி.வி. பிரகாஷின் ‘கிங்ஸ்டன்’ படத்திலிருந்து ‘ராசா ராசா’ பாடல் வெளியீடு!

-

- Advertisement -

கிங்ஸ்டன் படத்திலிருந்து ராசா ராசா பாடல் வெளியாகியுள்ளது.ஜி.வி. பிரகாஷின் 'கிங்ஸ்டன்' படத்திலிருந்து 'ராசா ராசா' பாடல் வெளியீடு!

ஜிவி பிரகாஷ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் கிங்ஸ்டன். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து திவ்யபாரதி, சேத்தன், அழகம்பெருமாள், இளங்கோ குமரவேல், ஆண்டனி, அருணாச்சலேஸ்வரன், ராஜேஷ் பாலச்சந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை கமல் பிரகாஷ் எழுதி இயக்கியிருக்கிறார். இப்படத்தை ஜிவி பிரகாஷின் பாரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனமும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்ய சான் லோகேஷ் எடிட்டிங் பணிகளை கவனித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லர் கதை களத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதைத் தொடர்ந்து டீசரும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ராசா ராசா எனும் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை ஜிவி பிரகாஷ் மற்றும் சுப்லாஷினி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். யுக பாரதி இந்த பாடல்வரிகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கிங்ஸ்டன் படமானது 2025 மார்ச் 7ஆம் தேதி திரைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ