Homeசெய்திகள்சினிமாயாரு சாமி நீங்க... ஒரே ஒரு மோஷன் போஸ்டர்ல எல்லாரையும் திரும்பி பாக்க வச்சுடீங்க!

யாரு சாமி நீங்க… ஒரே ஒரு மோஷன் போஸ்டர்ல எல்லாரையும் திரும்பி பாக்க வச்சுடீங்க!

-

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் மோஷன் போஸ்டர் கவனம் ஈர்த்துள்ளது.

திட்டம் இரண்டு படத்தின் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம் அடியே. இந்தப் படம் மல்டிவர்ஸ் கதைக்களத்தில் உருவாகியிருப்பதாகத் தெரிகிறது. இயக்குனர் வெங்கட் பிரபு, கௌரி ஜி கிஷன், மதுமகேஷ் மற்றும் மிர்ச்சி விஜய் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

சமீபத்தில் இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. அதில் சீமான் இலங்கையின் பிரதமராகவும், தோனி ஆர்சிபி கேப்டனாகவும், கேதர் ஜாதவ் தல என சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாகவும், விஜயின் யோஹன் அத்தியாயம் ஒன்று படம் 150 நாட்கள் வெற்றிகரமாக ஓடியதாகவும், அஜித் பார்முலா ஒன் ரேஸில் வென்றதாகவும் பல புதுமையான விஷயங்களை உள்ளே இறங்கியிருக்கிறார்கள். இதனால் மோஷன் போஸ்டர் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஜஸ்டின் பிரபாகரன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக கோகுல் பெனாய் மற்றும் எடிட்டராக முத்தயன் யு ஆகியோர் பணியாற்றுகின்றனர். இப்படத்தை மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம்.

MUST READ