Homeசெய்திகள்சினிமாஜிவி பிரகாஷின் 'ரிபெல்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஜிவி பிரகாஷின் ‘ரிபெல்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

ஜிவி பிரகாஷின் 'ரிபெல்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!ஜிவி பிரகாஷ் , பரத் நடிப்பில் வெளியான வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன் பிறகு அசுரன், சூரரைப் போற்று என பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருடைய இசைக்கும் பாடலுக்கும் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் மற்றும் மிஷன் சாப்டர் 1 போன்ற படங்களுக்கு ஜிவி பிரகாஷ் தான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல படங்களுக்கு இசையமைப்பாளராக கமிட் ஆகியுள்ளார். இவ்வாறு பிசியான இசையமைப்பாளராக வலம் வரும் ஜிவி பிரகாஷ் நடிப்பதிலும் ஆர்வம் உடையவர். அந்த வகையில் கிட்டத்தட்ட 25 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் இடி முழக்கம், கள்வன், கிங்ஸ்டன், டியர் உள்ளிட்ட பல படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

இதற்கிடையில் அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் ரிபெல் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து மமிதா பைஜூ, சுப்ரமணிய சிவா, கருணாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷே இசையமைத்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பாக படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் என அடுத்தடுத்து வெளியானது. அதை தொடர்ந்து முதல் பாடலும் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் ரிபெல் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி படம் மார்ச் 22 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

MUST READ