Homeசெய்திகள்சினிமாஜி.வி. பிரகாஷ், சீனு ராமசாமி கூட்டணியின் 'இடி முழக்கம்'..... முதல் பாடல் வெளியீடு!

ஜி.வி. பிரகாஷ், சீனு ராமசாமி கூட்டணியின் ‘இடி முழக்கம்’….. முதல் பாடல் வெளியீடு!

-

- Advertisement -

ஜி.வி. பிரகாஷ் தற்போது பிசியான இசையமைப்பாளராக வலம் வருகிறார். அதே சமயம் நடிப்பிலும் ஆர்வம் உடைய இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் டியர், கள்வன், கிங்ஸ்டன் உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கிறது. மேலும் ஜிவி பிரகாஷின் ரிபெல் திரைப்படமும் மார்ச் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.ஜி.வி. பிரகாஷ், சீனு ராமசாமி கூட்டணியின் 'இடி முழக்கம்'..... முதல் பாடல் வெளியீடு!

இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ் இடி முழக்கம் எனும் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, மாமனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய சீனு ராமசாமி இயக்கியுள்ளார். படத்திற்கு என் ஆர் ரகுநந்தன் இசை அமைக்க ஸ்கை மேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்து காயத்ரி, சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ். பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி கவனம் பெற்றது.

தற்போது இந்த படத்தின் அடி தேனி சந்தையில் எனும் பாடல் வெளியாகி உள்ளது. இந்தப் பாடலை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை அந்தோணி தாசன் மற்றும் மீனாட்சி இளையராஜா ஆகியோர் பாடியுள்ளனர் பாடல்வரிகளை வரதன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ