பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், தமிழ் சினிமாவில் ஒரு நடிகராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இவர் டியர், கிங்ஸ்டன், இடி முழக்கம், கள்வன் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அடுத்ததாக ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் ரிபெல் திரைப்படம் மார்ச் 22ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும் பா ரஞ்சித் தயாரிக்கும் புதிய படம் ஒன்றிலும் நடித்து வருகிறார் ஜிவி பிரகாஷ். இவ்வாறு பிசியான இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வரும் ஜிவி பிரகாஷ் ரசிகர்கள் பலருக்கும் சத்தம் இல்லாமல் உதவி செய்து வருகிறார். ஏற்கனவே ரசிகர் ஒருவர் ஒரு வயது குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக உதவி கேட்டிருந்த நிலையில் அவருக்கு ரூ. 75000 அனுப்பி பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்றார்.
@gvprakash
நான் ஒரு விவசாயி வீட்டு பையன் எனக்கு & எனது தந்தைக்கு உடுத்த உடை 👔 வாங்க உதவி செய்த #gvprakash Anna விற்கு மிக்க நன்றி🙏 உடை வாங்க ரூ 6000 உதவி செய்யதார்க்கு நன்றி அண்ணா🙏🥺
உங்கள் உதவியை ஒரு போதும் மறக்க மாட்டேன் அண்ணா🙏 pic.twitter.com/ybeKSj8f18— Mersal kumar (@Mersal_kumarsk) March 2, 2024
இந்நிலையில் தான் விவசாய குடும்பத்தில் பிறந்த ஒருவர் தனது தந்தைக்கு உடை வாங்க உதவி கேட்டு ஜிவி பிரகாஷுக்கு சமூக வலைதளத்தில் மெசேஜ் அனுப்பியுள்ளார். இதற்கு ஜிவி பிரகாஷ் , ரூ. 6000 அனுப்பி அந்த ரசிகருக்கு உதவி செய்துள்ளார். மேலும் அந்த ரசிகரும் ஜிவி பிரகாஷுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த தகவல் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் ஜிவி பிரகாஷுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.