Homeசெய்திகள்சினிமாஇது கண்டிப்பாக மிகவும் ஸ்பெஷலாக இருக்கும்..... அஜித்தின் குட் பேட் அக்லி குறித்து ஜி.வி. பிரகாஷ்!

இது கண்டிப்பாக மிகவும் ஸ்பெஷலாக இருக்கும்….. அஜித்தின் குட் பேட் அக்லி குறித்து ஜி.வி. பிரகாஷ்!

-

- Advertisement -

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், அஜித்தின் குட் பேட் அக்லி படம் குறித்து பேசியுள்ளார்.இது கண்டிப்பாக மிகவும் ஸ்பெஷலாக இருக்கும்..... அஜித்தின் குட் பேட் அக்லி குறித்து ஜி.வி. பிரகாஷ்!தமிழ் சினிமாவில் வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி. பிரகாஷ். இதை தொடர்ந்து இவர், ஏகப்பட்ட வெற்றி படங்களுக்கு இசையமைத்து பெயரையும் புகழையும் பெற்றுள்ளார். தற்போதும் இவர் விக்ரமின் வீர தீர சூரன், சிவகார்த்திகேயனின் பராசக்தி ஆகிய பெரிய ஹீரோக்களின் படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே ஜி.வி. பிரகாஷ், அஜித்தின் கிரீடம் படத்திற்கு இசையமைத்துள்ளார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஜி.வி. பிரகாஷ். முதலில் குட் பேட் அக்லி தொடர்பான அறிவிப்பு வெளியான போது இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க போகிறார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் அவருக்கு பதிலாக ஜி. வி. பிரகாஷ் களமிறங்கியுள்ளார்.இது கண்டிப்பாக மிகவும் ஸ்பெஷலாக இருக்கும்..... அஜித்தின் குட் பேட் அக்லி குறித்து ஜி.வி. பிரகாஷ்! எனவே ஜி.வி. பிரகாஷின் தரமான சம்பவம் குட் பேட் அக்லி படத்தில் இருக்கும் என ரசிகர்கள் பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய ஜி.வி. பிரகாஷ், “18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அஜித் சாருடன் இணைந்து பணியாற்றுகிறேன். கண்டிப்பாக இந்த படம் மிகவும் ஸ்பெஷலானதாக இருக்கும். மேலும் இப்படம் ஒரு மாஸ் சென்சேஷன் ஆக இருக்குமென நீங்கள் எதிர்பார்க்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ