Homeசெய்திகள்சினிமாஜிவி பிரகாஷின் 'அடியே'....திரை விமர்சனம்!

ஜிவி பிரகாஷின் ‘அடியே’….திரை விமர்சனம்!

-

ஜிவி பிரகாஷ் மற்றும் கௌரி கிஷன் நடிப்பில் இன்று ‘அடியே‘ திரைப்படம் வெளியாகி உள்ளது. இன்று நேற்று நாளை, மாநாடு உள்ளிட்ட படங்களைப் போல இந்த படமும் சற்று வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ளது.

விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள இந்த படத்தில் செந்தளினி என்ற கதாபாத்திரத்தில் கௌரி கிஷனும் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் ஜிவி பிரகாஷும் நடித்துள்ளனர். பள்ளி பருவத்தில் இருந்து கௌரி கிஷனை ஒருதலையாக காதலித்து வருகிறார் நடிகர் ஜிவி பிரகாஷ். அவரின் காதலை கௌரி கிஷன் இடம் சொல்லப்போகும் ஒவ்வொரு நேரமும் பல தடங்கல்கள் அவரின் வாழ்வில் ஏற்படுகின்றன.

ஒரு கட்டத்தில் தனது காதலை சொல்ல போகும் நேரத்தில் அவருக்கு விபத்து ஏற்பட்டு கோமா நிலைக்கு செல்கிறார். கண் விழித்துப் பார்த்தால் வேறு ஒரு உலகத்தில் இருக்கிறார். அப்போது கௌரியும் ஜிவி பிரகாஷும் திருமணமான தம்பதிகளாக வாழ்கின்றனர். அதாவது பேரலல் யுனிவர்ஸ் என்ற கற்பனை உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இருவரும் எப்படி திருமணம் செய்து கொண்டனர் என்பதை ஜி வி பிரகாஷ் புரிந்து கொள்வதே படத்தின் மீதி கதையாகும்.

ஜிவி பிரகாஷ் தனது முந்தைய படங்களை விட இந்த படத்தில் சற்று வித்தியாசமாகவும், சிறப்பாகவும் நடித்துள்ளார். ஹீரோயின் ஆக வரும் கௌரி கிஷன் காதல் காட்சிகளில் ரசிகர்களை கவர்ந்துள்ளார். வெங்கட் பிரபு இதில் கௌதம் வாசுதேவ் மேனன் ஆக நடித்துள்ளார். அவரின் கதாபாத்திரம் படத்திற்கு பலமளிக்கிகிறது. மிர்ச்சி விஜய் மற்றும் மதும் கேஷ் உள்ளிட்டோர் அவரவர் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர். படத்தின் முதல் பாதி சற்று குழப்பத்தை ஏற்படுத்தினாலும் இரண்டாம் பாதி சுவாரஸ்யமாக நகர்கிறது. விக்னேஷ் கார்த்திக் தனது கற்பனை திறமையால் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார். பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை படத்திற்கு பிளஸ் ஆக அமைந்துள்ளது. காமெடியான கதைக்களத்தில் கொஞ்சம் எமோஷனல் காட்சிகள் கலந்து முழு படமாக உருவாகியுள்ளது. மொத்தத்தில் குடும்பத்துடன் ஒருமுறை சென்று பார்க்கலாம்.

MUST READ