ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள கள்வன் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
ஜி.வி. பிரகாஷ் ஒரு பக்கம் பெரிய படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றி வந்தாலும் மறுபக்கம் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் நேற்று ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் ரெபல் திரைப்படம் வெளியானது. அடுத்ததாக ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் கள்வன் திரைப்படம் ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார். ஏற்கனவே நாச்சியார் திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கள்வன் திரைப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை அறிமுகம் இயக்குனர் பி வி ஷங்கர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியான நிலையில் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகிய கவனம் பெற்றது.
#kalvan trailer is here for all of you https://t.co/QDPQi0wJZW
— G.V.Prakash Kumar (@gvprakash) March 23, 2024
இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. காட்டு யானை ஒன்றை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. தற்போது இந்த ட்ரெய்லர் வெளியான நிலையில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படத்திற்கு இயக்குனர் பிவி சங்கர் தான் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹீரோவான ஜிவி பிரகாஷ் தான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.