Homeசெய்திகள்சினிமாஜி.வி. பிரகாஷ் நடிக்கும் 'ரிபெல்' படத்தின் இரண்டாவது பாடல்..... ரிலீஸ் எப்போது?

ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் ‘ரிபெல்’ படத்தின் இரண்டாவது பாடல்….. ரிலீஸ் எப்போது?

-

- Advertisement -

ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் ‘ரிபெல்’ படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் 'ரிபெல்' படத்தின் இரண்டாவது பாடல்..... ரிலீஸ் எப்போது?ஜி.வி. பிரகாஷ் பல பெரிய படங்களுக்கு இசையமைப்பாளராக கமிட்டாகி வருகிறார். அதே சமயம் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்தும் வருகிறார். அந்த வகையில் கிங்ஸ்டன், டியர், இடிமுழக்கம், கள்வன் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இப்படங்கள் அனைத்தும் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன. இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ் ரிபெல் என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தை RS நிகேஷ் எழுதி இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் மமிதா பைஜூ, சுப்ரமணிய சிவா, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார்.ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் 'ரிபெல்' படத்தின் இரண்டாவது பாடல்..... ரிலீஸ் எப்போது?ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியான நிலையில், அதை தொடர்ந்து முதல் பாடலும் வெளியாகி கவனம் பெற்றது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இப்படம் மார்ச் 22ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடல் (RISE OF REBEL) பிப்ரவரி 16 (நாளை) மாலை 5 மணி அளவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ