Homeசெய்திகள்சினிமாஜிவி பிரகாஷ் நடிக்கும் 'அடியே' படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட்!

ஜிவி பிரகாஷ் நடிக்கும் ‘அடியே’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட்!

-

பிரபல இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் கள்வன், டியர் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இதற்கிடையில் அடியே எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் ஜிவி பிரகாசுக்கு ஜோடியாக கௌரி கிஷன் நடித்துள்ளார். மேலும் வெங்கட் பிரபு மற்றும் மதும்கேஷ் உள்ளிட்ட சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். மாலி அண்ட் மாண்வி மூவி மேககர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார் கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பாக இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இருந்தது இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வருகின்ற ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ