அதிரடி கிளப்பும் ஜிவி பிரகாஷ்… ரிபெல் படத்தின் ட்ரைலர் வெளியீடு
பல ஹிட் பாடல்களை கொடுத்து வரும் ஜிவி பிரகாஷ் இசை மட்டுமன்றி, மறுபக்கம் நடிப்பிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார். பல தரப்பட்ட படங்களை தேர்வு செய்து நாயகனாக ஜிவி நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் உருவாகி வரும் டியர் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. சமீபத்தில் இவரின் அடியே திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள புதிய திரைப்படம் ரிபெல்.
இதனை அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்குகிறார். ஜிவி பிரகாஷ் தான் இதில் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா மற்றும் சி வி குமார் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ரிபெல் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது முழுவதும் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன
ரிபெல் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. சமூக வலைதலங்களில் வெளியான இந்த ட்ரைலர் வைரலாகி வருகிறது.